பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று பேசியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று விவாதம் பெரும் அளவில் பேசப்பட்டு வருகின்றது. பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கருத்து கணிப்பு நடத்தி அதன் மூலம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறையும் போது பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பெற்றோர்களின் கருத்தை அறிந்து தான் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இம்மாத இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பு குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.