கொரோனா காலக்கட்டத்தை காரணம்காட்டி ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழ்நிலை என்பதை காரணம் காட்டி நிறுவனங்கள் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் நிர்ணயம் செய்த கால அளவை மீறி தொழிலாளர்களை வேலை செய்ய வற்புறுத்தினால் 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தலைமை அலுவலகத்தை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது வரை 64 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து 8 மணிநேரம் மட்டுமே பணி செய்ய வேண்டும். 8 மணிநேரத்திற்கு மேலாக பணிகள் செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.