Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியா – சீனா மோதல் : 43 சீன வீரர்கள் மரணம், படுகாயம் …!!

இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 43 சீனா வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா  ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தாக செய்தி வெளியிடப்பட்டது.

Crucial India-China military meet over Ladakh standoff today ...

மேலும் இருதரப்பு வீரர்களும் மோதிக்கொண்டதில் சீன தரப்பு வீரர்கள் 43 பேர் மரணம் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு பிரதமர் மோடியுடன் நிலைமையை விளக்கி இருந்தார். இந்த நிலையில் தான் இந்திய வீரர்களிடன் பதிலடி தாக்குதலில் தற்போது சீன தரப்பிலும் 43 பேர் மரணம், படுகாயம் என்றும்தகவல் சொல்லப்படுகின்றது.

Categories

Tech |