இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது.
மொத்த பாதிப்பு :
இந்தியாவில் கொரோனா தொற்றால் 40,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12,296 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 5,055 பேருக்கும், டில்லியில் 4,122 பேருக்கும், மத்தியப்பிரதேஷத்தில் 2,846 பேருக்கும், ராஜஸ்தானில் 2,772 பேருக்கும், தமிழ்நாட்டில் 2757 பேருக்கும் உத்தரப்பிரதேஷத்தில் 2,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை :
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,887ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2000 பேரும், தமிழ்நாட்டில் 1,341 பேரும், டெல்லியில் 1256 பேரும், ராஜஸ்தானில் 1121 பேரும், குஜராத்தில் 896 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இறப்பு :
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,306ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 521 பேரும், குஜராத்தில் 262 பேரும், மத்தியபிரதேசத்தில் 156 பேரும், ராஜஸ்தானில் 65 பேரும், டெல்லியில் 64 பேரும், மேற்கு வங்கத்தில் 33 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் :
கொரோனா பாதித்த 28070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,775 பேரும், குஜராத்தில் 3,896 பேரும், டெல்லியில் 2,802 பேரும், மத்தியபிரதேசத்தில் 2013 பேரும், உத்தரபிரதேசம் மாநிலத்தில் 1,746 பேர் கொரோனா தொற்றால் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.