Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்தியா- நியூசிலாந்து ஆட்டம் ரத்து… சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!

மழை மற்றும் மோசமான சூழ்நிலை காரணமாக இந்தியா நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் களம் காண்கின்றது. சவுத்தம்டனில் போட்டி நடக்கும் ஐந்து நாட்களுக்கு மழை குறுக்கீடு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.

முதல் நாளில் மழை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று போட்டி துவங்குவதற்கு முன்பே மழை பெய்ய தொடங்கியது. மழை நின்ற பிறகு டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில் மேலும் மழை அதிகரித்த காரணத்தினால் முதல் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை போட்டி தொடரும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |