தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்; தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின் கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகமும் மே 18-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.