கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.