TNPSC குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து குரூப் -2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசரனை நடைபெற்று வருவதாக TNPSCதெரிவித்துள்ளது .
குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அதில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் பலரை கைது செய்யும் நோக்கில் விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில் குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தற்போது டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குரூப் 4தேர்வு முறைகேடு வெளிவந்த அடுத்த நாளே குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது என்றும் , அதே ராமேஸ்வர மையத்திலிருந்து முதல் தரவரிசையில் இருந்து 50_க்குள் 30 பேர் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது.
குரூப் 2 தேர்வு முறைகேடு உறுதியான பிறகு அதற்கு பிறகு குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கான விசாரணையில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும் குரூப்-2 A தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானால் குரூப்-4 தேர்வில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே நடவடிக்கையை இதிலும் தொடரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.