ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் துவங்கியுள்ள நிலையில் CSK அணி பல முன்னணி வீரர்களை தக்கவைத்து 48 கோடியை மீதம் வைத்துள்ளது.
ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் 298 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தமாக 590 பேர் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் இல் முதல் கட்டமாக அஷ்வின், போல்ட், கம்மின்ஸ் டிகாக், தவான், ரபாடா, ஷ்ரேயஸ், ஷமி, வார்னர், டுபிளெசிஸ் ஆகியோர் ஏலம் விடப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இருக்க பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக 72 கோடியும், டெல்லி அணியிடம் குறைந்தபட்சமாக 47.5 கோடியும் உள்ளது. அதேபோல் csk அணி தோனி உட்பட பல முன்னணி வீரர்களை தக்க வைத்து 48 கோடியை மிச்சம் வைத்துள்ளது.