கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கக்குமா ? என்ற கேள்வி எழுந்தநிலையில் தற்போது ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடக்கும் பிசிசிஐ நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கின்றது.
கொரோனா காரணமாக மத்திய அரசு மக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தி பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்துமாறு பிசிசிஐக்கு வெளியுறவுத்துறை அமைச்கம் வலியுறுத்திய நிலையில் தற்போது ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.