Categories
மாநில செய்திகள்

#BREAKING: எஸ்.பி.வேலுமணி வீட்டில் ஐ.டி. ரெய்டு – கோவையில் பரபரப்பு …!!

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவரின் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு திரண்டு வருகின்றனர்.

வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் என்பவரின் வீட்டிலும் காலை முதலே  இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையால் அதிமுக வட்டாரங்கள் பயத்தில் உறைந்து போய் உள்ளன. ஏற்கனவே இரண்டு முறை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்த சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |