உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மத்திய அரசாங்கமும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்துள்ளது. எந்த வகையிலும் கொரோனா பரவலுக்கு மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகளும், அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனா, காங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்தில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பயணத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை அறிக்கையை ஏர் ஸ்வேதா ( Air Suvidha ) இணையத்தில் பயணிகள் பதிவேற்ற வேண்டும். 6 நாட்டு விமான பயணிகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தியுள்ளார்.