Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: எந்த கட்சியிலும் இணையலாம் – ரஜினி திடீர் பரபரப்பு அறிவிப்பு…!!

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் வேறு எந்த கட்சியிலும் இணைந்து கொள்ளாலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் கட்சி தொடங்க போவதாக அறிவித்து பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இது  இவருடைய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு எந்த கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |