தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பாக வழக்கு விசாரணையின் போது விசாரணையின் போது மனுதாரரான பெண்னிடம் வழக்கறிஞர் ஒருவர் முறை தவறி பண்பாடற்ற முறையில் கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருக்கக்கூடிய நீதிபதி தர்மபுரி மாவட்டத்தின் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் எழுப்பிய பண்பற்ற கேள்விக்காக மனுதாரர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார்.
வழக்கினுடைய பின்னணி:
பாகப்பிரிவினை வழக்கு விசாரணை போது இரண்டாவது மனைவியும், மகன் தரப்பு வழக்கறிஞர் மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்து, அவர்களின் தாயாரை அவமதிக்கும் வகையில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நீதிமன்றத்திலேயே இந்த விகாரம் நடைபெற்றுள்ளதால், அதற்காக உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நீதிபதி பரதன் சக்கரவர்த்தி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் மனுதாரர்களை அவமானப்படுத்துக்கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, தங்களது உரிமைக்காக நீதிமன்றத்தில் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது என்று எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.