டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பளிக்கும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தை டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினார். இந்த விசாரணையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகியோரும் சிபிஐ_க்கு ஆதரவாக துஷார் மேத்தா_வும் வாதாடினார். பின்னர் இந்த விசாரணை 1.30 மணி நேரம் நடைபெற்றது.இரண்டு தரப்பும் மாறி மாறி தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.
அனல் பறக்கும் விவாதம் மாறிமாறி நடைபெற்றது.இதில் சிபிஐ தரப்பு அவருக்கு ஏதும் சலுகை அளிக்க கூடாது. ஆதாரம் இருப்பதால் ப.சிதம்பரத்தை கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று வாதாடியது. பின்னர் ப.சிதம்பரம் நீதிபதியிடம் விளக்கம் அளித்தார்.
சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்ற வழக்கில் வாதம் மற்றும் பிரதிவாதத்தை கேட்டறிந்து தீர்ப்பை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தவிட்டிருந்தார். இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதனால் கடந்த 2 நாட்களாக நீடித்த பரபரப்பு தற்போதும் நீடிக்கின்றது.