ஜூன் 21-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை மேலும் குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகான செலவு அனைத்தையும் மத்திய அரசு ஏற்கும் என்று கூறியுள்ளார். ஜூன் 21-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும் என தெரிவித்தார். தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25% செலவையும் மத்திய அரசே ஏற்கும் என்று இந்த உரையில் தெரிவித்துள்ளார்.