Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜூன் மாதமும் ரூ. 2000… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூபாய் 2000 வாங்காதவர்கள் ஜூன் மாதமும் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து முதல் தவணையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாள் அன்று ரூ.2000 வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தற்போது மே மாதம் 2000 ரூபாய் வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள், ஜூன் மாதம் இரண்டாவது தவணை வழங்கும்போது வாங்கிக்கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |