சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்சிங்கம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது .அதில் ஒன்பது சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா உறுதியானது. இதில் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இரண்டு சிங்கங்களுக்கு,சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற புதிய வகை தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் அவற்றை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இரண்டு சிங்கங்களின் ஒரு சிங்கம் உயிரிழந்ததாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் தொற்று ஏற்பட்டு உள்ள மற்ற சிங்கங்களை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.