Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி ….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மரணம்  தொடர்பாக, அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. அதன் பின்னர் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அந்த பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற விசாரணை தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணை வந்த போது, இந்த பள்ளிக்கூடத்தின் கட்டடம் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகிறதா ?  என்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி போலீஸ்சுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஷின்னா ஆஜராகி, விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. குற்ற பத்திரிகை மூன்று மாதத்தில் நாங்கள் தாக்கல் செய்து விடுவோம் என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளியை திறப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி – கல்வி துறையை சரிவில் ஆஜரான வழக்கறிஞரும் இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதை நாங்கள் செயல்படுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை எல்லாம் கேட்ட நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார்,  கள்ளக்குறிச்சி கனியாமூர்  பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறார். சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்பு நடத்தலாம் என்றும், நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. ஒரு மாதத்திற்கு பின்பு நீதிமன்றம் அப்போது  நிலமை ஆராய்ந்து  உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்றும்,  பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

பள்ளி கல்வித்துறை, காவல்துறை,  மாவட்ட நிர்வாகம் தரப்பில் பள்ளியை திறக்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள் என்றும்,  ஆனால் மழலையர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை  பிறப்பித்துள்ளதாகவும்,  பள்ளியை திறக்கும்போது ஏ மற்றும் பி பிளாக்குகளை  பயன்படுத்தலாம், மிகுந்த சேதமடைந்த சி மற்றும் டி பிளாக்குகளை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்திருக்கிறார்.

அதேபோல ஹாஸ்டல் இயங்கி வந்த மூன்றாவது மாடியை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள நீதிபதி, விடுதி உள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும் என்றும்,  அனுமதி அளிப்பதற்கு உரிய முடிவெடுப்பது குறித்து பின்னர் வழக்கு விசாரணையில் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |