Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசினுடைய சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர்  முகமது ஜின்னா ஆஜராகி,  மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்,  கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மாணவர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டம் வகுத்துள்ளதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பான அறிக்கையும் அந்த சிலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், மாணவி மரணம் தொடர்பாக வதந்தி பரப்பிதாக 53 youtube சேனல் முடக்கப்பட்டுள்ளது. 7  twitter பக்கம், 21 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டதாக தெரிவைக்கப்பட்டது.  மூன்று whatsapp குரூப்புகளின் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கலவரம் தொடர்பாக 63 போலீசார் உட்பட 202 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளையும்,  தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாகவும்,  நேற்று முன்தினம் மாணவினுடைய தாய் முதலமைச்சரை சந்தித்து பேசி இருப்பதாகவும்,  மாணவியின் தாயிடம் பேசிய முதலமைச்சர், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.அதன் அடிப்படையில் மனுதாரர் தெரிவிக்கும் அச்சம் உட்பட அனைத்து  தரப்புகளிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜிப்மர் ஆய்வு அறிக்கை மற்றும் விசாரணை குறித்து அறிக்கை மனுதாரருக்கு வழங்க மறுத்த நீதிபதி மாணவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் நியமிப்பதற்காக அரசுக்கு பாராட்டும் தெரிவித்தார். மேலும் வழக்கினுடைய விசாரணையை விரைந்து மேற்கொண்டு முடித்து விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு,  விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து இருக்கிறார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

Categories

Tech |