கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
ஜிப்மர் மருத்துவமனை மாணவியின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட மற்ற அறிக்கைகளை தராமல் இருந்தார்கள். காவல்துறையினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். காரணம், விசாரணை சரியாக சென்று கொண்டிருப்பதால் இடையில் அறிக்கைகளை கொடுப்பது குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியிருந்தார்கள். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தாயார் சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது.
அதேபோல பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராகவும் மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. விரைவாக இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் அந்த மாணவியின் தாயார் தரப்பிலான வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.