கனியாமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 69 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் கைது செய்யப்பட்ட 174 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்ததனர். அந்த மனுக்கல் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இதில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா உத்தரவு பெற்றுள்ளார். மேலும் உள்ளவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 174 பேரின் ஜாமீன் மனு தாக்கல்செய்திருந்த நிலையில் நீதிபதி பூர்ணிமா 69 பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.