கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.
இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் வரும் 16 தேதி கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெறுள்ளது.