திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து வரும் KN நேருக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார் கே என் நேரு. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கே என் நேரு தலைமையில் திருச்சியில் திமுக மிகப்பெரிய வெற்றி கண்டது.திமுக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஆர் பாலு நாடாளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பு வகிப்பதால் அவருக்கு பதிலாக KN நேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த KN நேருக்கு திமுகவின் உயர்மட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.