மகாராஷ்டிராவில் சிவசேனா ,காங்கிரஸ் , சிவசேனா தேசியவாத காங்கிரஸ் நாளை ஆளுநரிடம் சந்திக்கிறார்கள்.
மகராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள். மூன்று பேருக்குமே ஒத்துக் கொள்ளக்கூடிய விஷயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கலாம் என்றும் , அதன்பிறகு ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்ட போதிலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணி அமைப்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. யார் முதலமைச்சர் ? என்னென்ன பதவிகளை பகிர்ந்து கொள்ளப்படும் ? யாரெல்லாம் அரசாங்கத்தில் கலந்து கொள்வார்கள் ? யாரெல்லாம் அரசிற்கு வெளியே இருந்து ஆதரவு அளிப்பார்கள் ? போன்ற பல்வேறு விஷயங்கள் பேசியப்பட்டன.
இதை தொடர்ந்து தான் தற்போது காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள்மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்திப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆளுநரை சந்திக்கும் அந்த நேரத்திலேயே அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்தும் கோரிக்கை மனு அளிப்பார்கள் என்று சொல்லப்பட்டுகிறது. ஆனால் கோரிக்கை மனு அளிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அரசியல் ரீதியாக குழப்பம் நீடித்து வரும் நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆளுநர் கோஷியரையை சந்திக்க இருக்கிறார்கள்.