Categories
மாநில செய்திகள்

BREAKING: மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை – காவல்துறை தகவல் …!!

தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை காவல்துறை தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக  நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்த போது மீரா மிதுன் ஆஜர் ஆகாததால் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாதகைது வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மீரா மிதுனை பல இடங்களில் காவல்துறையினர் தேடி வருவதாகவும்,

அவர் இருக்கும் இடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார். பெங்களுருவில் மீரா மிதுன் தலைமுறைவாக இருப்பதாக வந்த தகவலின் படி, மீரா மிதுனை தேடி அங்கு சென்றபோது, அங்கிருந்து அவர் வேறு இடத்துக்கு சென்று விட்டதாகவும், அவரது செல்போன் எண்ணையும் அடிக்கடி மாற்றி வருவதாகவும் விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக பிடிவாரண்டு நிலுவையில் இருப்பதாகவும்,  கைது செய்ய உரிய நடவடிக்கை காவல்துறையினர் எடுக்கவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்து வழக்கினுடைய விசாரணையை வரும் அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.

Categories

Tech |