வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஸ்குமார் தெரிவித்துள்ளார்
பெரிய நகரங்களில் ரூ.5000 மற்ற பகுதியில் ரூ.3000 வரையிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது கட்டாயமாக முன்பு இருந்தது. தற்போது வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியானதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.