சசிகலா வரும் 7 ஆம் தேதி தமிழகம் வந்தவுடன் சில அமைச்சர்கள் திரும்ப வாய்ப்புள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூரு பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சசிகலா வருமாறு 7ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் உண்மையான தொண்டர்கள், விசுவாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சிகலா பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் மகன் உட்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழகம் திரும்பிய உடன் அமைச்சர்கள் சிலரும் அவர் பக்கம் சென்று விடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.