அதிமுக கொடியை பயன்படுத்தியதாக சசிகலா மீது டிஜிபியுடம் அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவருடைய காரில் அதிமுக கட்சி கொடி இருந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக கொடியை பயன்படுத்தியதாக சசிகலா மீது டிஜிபியுடம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். பிப்ரவரி- 8 ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னைக்கு சசிகலா திரும்பும் நிலையில் புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.