Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் கொரோனா அச்சம்: மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம்…!!

புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.  அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல்,  தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் போன்றவை கண்காணித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த ப்ளூ காய்ச்சல், மூச்சுத் திணறல் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு ஏற்கனவே அனுப்பி உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனைகள் தேவையான அளவுக்கு படுக்கைகளை தயாராக வைக்க வேண்டும். கொரோனா திடீரென அதிகரித்துள்ளதால் அதை எதிர்கொள்ள தேவையான அளவிற்கு மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி தர வேண்டும். கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

Categories

Tech |