நயன்தாரா இரட்டை குழந்தை விவரம் விசாரணையை தற்போது அதிகாரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் தொடர்ந்து கேள்விக்குறியாக தான் இருந்தது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது இணை இயக்குனர் தலைமையில் விசாரணையானது துவங்கி இருக்கின்றது.இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனைகள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும்,
உரிய முறையில் அவர்கள் இருவரும் பதிவு செய்யப்பட்டார்களா ? அதுமட்டுமல்லாமல் இதுவரை வாடகைத்தாய் முறையில் பதிவு செய்த விவரங்களையும் அரசுக்கு அந்த குழு வழங்கப்பட உள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் பெயர் வாடகைத் தாய் பட்டியலில் உள்ளதா ? எனவும் விசாரணை நடைபெற உள்ளது. இவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டார்கள் ? தமிழகத்தில் சிகிச்சை எடுத்தார்களா அல்லது வெளிநாட்டில் சிகிச்சை எடுத்தார்களா ?
தமிழ்நாட்டில் என்றால் உரிய நடவடிக்கைகளை பின்பற்றி இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டார்களா என்பது பற்றி எல்லாம் இந்த குழுவானது தற்போது விசாரணையை தொடங்கி உள்ளது. மருத்துவமனையில் இந்த குழு விசாரணை முடித்த பிறகு, தேவைப்பட்டால் நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதாரத் துறை தற்போது திட்டமிட்டுள்ளார்கள். இந்த விசாரணை முடிந்த பின்பு இணை இயக்குனர் தலைமையிலான குழு, TMS இயக்குனரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்கள். அதன் பிறகு அரசுக்கு இது குறித்து அறிக்கை வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.