நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராக கோரி சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2018 நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் குமார் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெளிமாநிலத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலை கேட்டு சிபிசிஐடி போலீசார் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்து இருந்தது.
அதன் ஒரு கட்டமாக 2018ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விசாரணைக்க்காக சிபிஎஸ்சி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிசிடிஐ போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இதனையடுத்து விசாரணைக்கு வருமாறு சிபிஎஸ்சி அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் உதவியால் தான் இந்த முறைகேடானது நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. எனவே இடைத்தரகர் பிடிப்பதற்கான முயற்சியில் சிபிசிஐடி போலீஸார் தனிப்படை பெங்களூருக்கு விரைந்துள்ளது. அங்கு இருக்கக்கூடிய பயிற்சி மையம் மற்றும் இடைத்தரகர் யார் என்ற கோணங்களில் விசாரணையை முன்னெடுத்து வருகின்றார்கள்.