Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கில் புதிய தடை- மேலும் ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் …!!

நிர்பயா வழக்கில் மூன்றாவது குற்றவாளியான அக்சய் குமார் சிங் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.

உச்ச நீதிமன்றம்

5 குற்றவாளிகளில் 32 வயதான முகேஷ் குமார் சிங் தூக்கு தண்டனையில் இருந்து கருணை காட்ட கோரிய மனுவை ஜனாதிபதி கடந்த 17ஆம் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ததோடு , ஜனாதிபதி நிராகரித்ததை நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுசீராய்வு  செய்ய மனு தாக்கல் செய்துள்ளதை டெல்லி திகார் சிறை அதிகாரிகள் உறுதி படுத்தியுள்ளனர்.

Categories

Tech |