கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது மாநில அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியில் வசித்துவந்த சந்தோஷ் குமர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் தற்போது கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் தற்போது பல விடயங்களை அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
அதில், சிறுமியின் பாலியல் வன்கொடுமை தடய அறிவியல் துறையின் டி என் ஏ பிரிவில் பணிபுரிந்து வந்த மருத்துவர் வந்து இந்த வழக்கில் சாட்சியம் அளித்த போது தனது மகளின் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வதற்கு உள்ளானதில் மேலும் ஒரு நபரின் விந்தணு உள்ளது அதனால் இந்த வழக்கில் இன்னொருவரின் பங்கு இருப்பதாக அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சென்னையை சேர்ந்த சென்னையில் உள்ள தடய அறிவியல் துறையில் கொடுக்கப்பட்ட அறிக்கையில் மேற்கோள் காட்டியும் இந்த மனுவை தாக்கலை அவர் செய்துள்ளார்.
இதனால் இந்த வழக்கில் தீடிர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சந்தோஷ்குமார் மட்டுமே வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கை முடித்து நிலையில் தாயாரின் புதிய மனுதாக்கல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் DNA_ஆய்வு மெடியவுகளை மேற்கோள்கட்டி இந்த வழக்கில் கூடுதலாக பெண் அதிகாரி நியமனம் செய்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.