இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ். ஒட்டுமொத்தமாக அவரது ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தான் சார்ந்திருக்கும் கூட இந்த இயக்கத்திற்கு செய்த துரோகம் எல்லாம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்று நம்முடைய முன்னாள் அமைச்சர் உதயகுமார் ( அம்மா பேரவை செயலாளர் ) பேட்டி எடுத்துப் பாருங்கள். திரும்ப நான் உள்ளே போக விரும்பல. அந்தளவுக்கு துரோகம் என்பது அவரின் உடன் பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நமது அம்மா நாளிதழில் ஒரு அங்கமாக வைத்திருக்க முடியாது என ஜெயக்குமார் தெரிவித்தார்.
Categories