Categories
மாநில செய்திகள்

BREAKING NEWS: சீனாவிலிருந்து தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா!!

உருமாறிய கொரோனா தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து அங்கு பல்வேறு காரணங்களுக்காக சென்றவர் சொந்த ஊர் திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகில் இருக்கக்கூடிய தப்பகுட்டை கிராமத்திற்கு அருகாமையில் இருக்கக்கூடிய சிற்றூர். கருப்பு கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் கடந்த 13 ஆண்டுகளாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வந்து கொண்டு உள்ளார்.

இவர் நேற்று முன்தினம் நேற்று விமான மூலம் கோவை விமான நிலையத்தை தனது குடும்பத்தாருடன் வந்து இறங்கினார். மனைவி, மகன் ஆகியோருடன் கோவை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்பொழுது அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எனவே அவர் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதேபோல அவர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டிருக்கிறார். சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் வழக்கமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு,  அப்பகுதியில் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |