சென்னை மாநகர பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 11,141 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வரமாக சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு 500-க்கு அதிகமாக பதிவாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனிடையே, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அதன்படி தொழில் நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. 25 மாவட்டங்களில் உள்ளூர் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. எலக்ட்ரோனிக்ஸ் விற்பனை கடைகள், முடிதிருத்தும் கடைகள், மதுக்கடைகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் மறுபுறமோ, தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். இதனை காரணமாக பலி எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் அதிகபடச்சமாக 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,324 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னையில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, இன்றும் 565 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை போன்ற மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.