காஷ்மீரை மூன்று மாநிலங்களாக மத்திய அரசு பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
கடந்த சில தினங்களாகவே ஜம்முவில் என்ன நடக்கின்றது என்று இந்தியா முழுவதும் விவாதம் எழுந்துள்ளது.எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவில் பாத யாத்திரை தற்போது நடைபெற்று வருகின்றது. லட்சட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு செல்லும்பாதயாத்திரை வழித்தடத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்படத்தை தொடர்ந்து இந்த பதற்றம் தொடங்கியுள்ளது.
மேலும் பாதுகாப்பு படை மற்றும் துணை இராணுவப்படை என 28,000 வீரர்கள் குவிக்கப்பட்ட்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றது.சுதந்திர தின விழா இன்னும் 12 நாட்களில் வரக்கூடிய நிலைகளில் இதற்காக காஷ்மீரில் வழக்கமாகவே ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஏனெனில் இந்த நேரத்தில் அதிக அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தபடுவது மிக அதிகமாக இருக்கும். எனவே அதனை முறியடிக்க ராணுவம் அதிகரிக்கப் பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகின்றது.
அதே வேளையில் ஜம்முவிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு இரத்து செய்து. காஷ்மீரை மூன்று மாநிலங்களவாக பிரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்ட்டமிட்டு வருகின்ற சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் எதனால் ஏதேனும் வன்முறை சம்பவம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை என்றும் பேசப்படுகின்றது.
இதன் காரணமாகவே ஜம்முவில் இப்படியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது. இருந்தாலும் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களை அவரவர்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டடுள்ளது. அங்குள்ள மக்கள் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள்.இந்திய ராணுவனத்தின் விமானப்படை மற்றும் இராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.இதனால் காஷ்மீரில் பதற்றம் நீடிக்கின்றது.