Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் இன்று மேலும் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னை மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,500-ஐ தாண்டியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 500க்கு மேல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை, சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,131 ஆக இருந்தது. அதில், தற்போது வரை 5,331 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 83 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் தற்போது வரை 5,643 பேர் உள்ளனர். இந்த நிலையில் மேலும் புதிய பாதிப்புகளால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,065 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கோடம்பாக்கத்தில் – 1,488 பேரும், திருவிக நகரில் 1,253 பேரும், தேனாம்பேட்டையில் 1,188 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முதன்முறையாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 805 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |