Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING NEWS: மீண்டும் முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார் ..!!

அண்மை காலமாகவே ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு பாஜகவோடு சுமூகமாக உறவு இல்லை. இந்நிலையில் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகி உள்ளார்.பீகார் மாநில ஆளுநர் பகு சவுகானை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் நிதீஷ்குமார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து லாலு பிரசாத்தின் (ராஷ்டிரிய ஜனதா தளம்) வீட்டிற்கு நிதிஷ்குமார் புறப்பட்டு சென்றுள்ளார்

ஏற்கனவே அவர் முன்கூட்டியே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டார். ஆகவே தான் ஆளுநரை மாலை சந்தித்து ராஜினாமா கோரி இருக்கும் அதே நேரத்தில், நான் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாகவும், இந்த முறை பாரதிய ஜனதாவுக்கு பதில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கிறது என்பதை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில்  மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் முதலமைச்சர் ஆக ஆட்சி அமைத்து பதவி ஏற்க  இருக்கிறார். பீகாரில் மொத்தமுள்ள 243 எம்எல்ஏக்களில் 160 பேரின் ஆதரவு ஐ.ஜ.க மற்றும் ஆர்.ஜே.டி கூட்டணிக்கு உள்ளது.

Categories

Tech |