இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்து; அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது, தொண்டர்கள் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வீழ்த்த முடியாது.
எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. மன கசப்புகளை எல்லாம் மறந்து, அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மீண்டும் வலுவான கட்சியாக இருந்து, ஒன்றுபட்டு ஆட்சியைப் பிடிப்பதே எங்கள் நோக்கம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.