செம்மொழிக்கான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கரூர் எம்பி ஜோதிமணியின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதிலில், நிதி ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.
தமிழை வளர்ப்பதற்காக சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 8 ஆண்டுகளில் 74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழிகளை வளர்க்க டெல்லியில் உள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு 8 ஆண்டுகளில் 1488 கோடி ஒதுக்கி உள்ளது.
இந்தி, சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் தருவதாக குற்றச்சாட்டப்பட்டும் நிலையில் நிதி ஒதுக்கீடு அதனை அம்பலப்படுத்தி உள்ளது.கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய ஒட்டுமொத்த தொகை ஓராண்டு சமஸ்கிருத வளர்ச்சிக்கான நிதியை விட குறைவு. அதிகபட்சமாக 2019 – 2020இல் சமஸ்கிருத வளர்ச்சிக்காக 247 கோடி ஒதுக்கப்பட்டது. 2019- 2020இல் தமிழ் வளர்ச்சிக்காக வரும் 10 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது மோடி அரசு.