வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை 9ஆம் தேதி அதி கன மழைக்கான ”ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 9ஆம் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாகவும், இன்று மாலை மேலும் வலுபெற்று காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறியிருக்கின்றனர்.
தொடர்ச்சியாக நாளை அது ”புயலாக” மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. மேலும் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.