நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்து தண்டனையை கால தாமதப்படுத்தும் அனைத்து சட்ட ரீதியிலான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைக் குறிப்பிட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து , இது தொடர்பான மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் , அந்த தண்டனையை காலதாமதம் செய்ய கூடிய விஷயங்களை அவர்கள் செய்து வருகிறார்கள்.
புதிதாக நேற்றைய தினம் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள். பவன் குமார் மற்றும் அக்ஷய் குமார் ஆகிய இருவரும் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்ய விரும்பினோம்.ஆனால் அதற்கு தேவையான ஆவணங்களை திகார் சிறைச்சாலை எங்களுக்கு வழங்கவில்லை. ஆகவே காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாகக் ஆவணங்களை எங்களிடம் கொடுக்க வேண்டி உத்தரவிடுங்கள் அதுவரை எங்களுக்கான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த மனுவின் விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது , திகார் சிறை நிர்வாகம் சார்பிலும் , டெல்லி காவல்துறை சார்பில் மிக முக்கியமான வாதம் முன்வைக்கப்பட்டது. இவர்களுக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் நாங்கள் கேட்ட உடனேயே வழங்கி விட்டோம். அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இருக்கிறோம். தேதிவாரியாக நாங்கள் இவர்களுக்குக் கொடுத்த ஆவணங்கள் குறித்த பட்டியலை நாங்கள் உங்களிடம் கொடுத்திருக்கின்றோம். இவர்கள் வேண்டும் என்று தண்டனையை தள்ளிப் போட வேண்டும் என்பதற்காக இந்த குறுக்கு வழிகளை பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
திகார் சிறை நிர்வாகம் மற்றும் டெல்லி காவல் துறை சார்பாக வைக்கப்பட்ட மேற்கண்ட வாதங்களை ஏற்றுக்கொண்ட கீழமை நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கினை தள்ளுபடி செய்வதாக கூறி இருக்கின்றார்கள்.இதனால் வரும் 1ஆம் தேதி காலை 6 மணிக்கு இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.