Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா இல்லை- தமிழக சுகாதாரத்துறை

கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார்.இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் 66 வயது முதியவருக்கு சிறுநீரக நோய் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும், 2 வயது ஆண் குழந்தை பிறவி எலும்பு நோயால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் நிமோனியா தொற்றால் இரத்தத்தில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால்  25 வயது ஆண் உயிரிழந்தார் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

மேலும் இறந்த மூவரின் தொண்டை , ரத்த மாதிரி பரிசோதனையில் மூவருக்கும் கொரோனா இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கியுள்ளது. இன்றும் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதற்கும் முன்பும் இதே போல கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தார்கள் அவர்களுக்கும் கொரோனா இல்லை என்று முடிவு வந்திருந்தது. கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |