Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது – கெஜ்ரிவால் உத்தரவு …!!

டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கோரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று 298 உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் 5 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

பெரிய பெரிய திரையரங்குகள், மால்கள் , நட்சத்திர விடுதிகள் , சுற்றுலா தளம் என மக்கள் கூட கூடிய அனைத்துக்கும் தடை விதித்துள்ள மத்திய அரசு, நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தலைநகர் டெல்லிலும் கொரோனா தாக்கம் வேகம் எடுத்து வருகின்றது. கொரோனவால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ள டெல்லியில் 25 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மாநில அரசாங்கம் முன்னதாகவே பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

குறிப்பாக பொது இடத்தில் 20 பேர் கூட கூடாது என்ற டெல்லி போலீஸ்சட்டத்தை பிறப்பித்திருந்த நிலையில் அதை மாற்றி,  5 பேருக்கு மேல் கூட கூடாது என்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அப்படியே கூடினால் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று  வலியுறுத்திய கெஜ்ரிவால் , தேவைபட்டால் முழு ஊரடங்கை அமுல்படுத்துவோம் என்றும் தெரிவித்தார். 

Categories

Tech |