தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் , புதுவை , கேரளா , கர்நாடகா, தெற்கு ஆந்திரா ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தொடங்கும் என நினைக்க பட்ட நிலையில் ஒரு நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கூறியுள்ளது.
பொதுவாக வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி நவம்பர் , டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும். தமிழகத்திற்கு கிட்டத்தட்ட 60% மழையைத் தருவது இந்த வடகிழக்கு பருவமழை தான். தென்மேற்கு பருவமழையில் மழை பெய்தாலும் அது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது. ஆனால் தமிழகத்தில் அதிகப்படியான மழையை கொடுப்பது வடகிழக்கு பருவமழை தான் .கடந்த 2015ஆம் ஆண்டில் பார்த்தால் அதிகப்படியான மழை பெய்தது. சென்னையில் வெள்ளம் வந்தது. அந்த சமயத்தில் 63% இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகி இருந்தது.
அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வருதா புயல் வந்தது அப்போது நமக்கு அதிக பருவமழை கிடைத்தது. நமக்கு வடகிழக்கு பருவமழையால் 44 சென்டிமீட்டர் மழை கிடைக்கும். கடந்த ஆண்டு தமிழகத்திற்கு இயல்பை விட 20 % மழையின் அளவு குறைந்தது. இதனால் கடந்த மே , ஜூன் மாதங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. சென்னையில் தண்ணி பஞ்சம் ஏற்படாது. சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரியில் சுத்தமாக தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. அதனால் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் தற்போது வடகிழக்கு மழை தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.