நாடே உற்றுநோக்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்குகின்றது. தலைமை நீதிபதி தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் :
நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது.
சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது; அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை நம்புகின்றனர்
பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல
தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை