Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: நவ. 11-ல் சென்னையில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கின்றது.

அடுத்த 48 மணி நேரத்திற்கான சென்னைக்காண வானிலை முன்னறிவிப்பில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக தமிழ்நாட்டில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதிகளில் 6 சென்டிமீட்டர் மழையும்,  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டம் திருப்பேரூர்  ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி இருக்கிறது.

Categories

Tech |