Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்…!!

அண்மையில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய அவர், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும்,  எடப்பாடி தனி கட்சி தொடங்கட்டும் என்றும் சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி,  பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என  பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு ஓபிஎஸ்சுக்கு, அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது . பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் ஒன்று அனுப்பிருக்கிறார்.

அந்த பதிலில், அதிமுகவை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ அதற்கு நேர் மாறாக …  சட்ட விதிகளுக்கு எதிராக தற்போது எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தகுதிநீக்கம் செய்ய முடியும் என்றும்,  பொதுக்குழுவால்  தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி இது போன்ற நோட்டீஸ் அனுப்புவது  சட்ட விரோதம் என்றும்,  அது யூகத்தின் அடிப்படையில்…  அனுமானத்தின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக  ஓபிஎஸ்  தெரிவித்திருக்கிறார்.

கட்சி அலுவலக முகவரியை பயன்படுத்திய தொடர்பாக ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த   கருத்துக்கள்… அந்த பிரதான வழக்கினுடைய பிரதான வழக்கினுடைய விசாரணைக்கு பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். எனவே கொடியையோ, முகவரியையோ  அலுவலக பெயரையோ பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |